Monday, November 21, 2005

கலாச்சாரக் கோவலர்கள் - உஷார்

குஷ்பு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பிய சுகாசினி "கலாச்சாரக் காவலர்களின்" பிரதிநிதிகளால் அலைக்ககழிக்கப்படுவதைத் தொடர்ந்து, குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதாக, தற்போது, சானியா மிர்ஸாவும் சிக்கலில் மாட்டியுள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதரபாத் வரை, அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு, ABVP (Akhil Bharathiya Vishwarthi Parishad) மற்றும் பெயரில்லா முல்லாக்களின் ஆதரவாளர்களும் (இம்மாதிரி விவகாரங்களில் இவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை!) பல இடங்களில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சானியா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போட்டுக் கலக்கியதில், சானியா கலங்கிப் போய் பின் வாங்கி விட்டார்!!!

குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல பதிவுகள் வந்து விட்டன. இந்தியா டுடே கருத்துக் கணிப்பு குறித்த பேட்டியில் அவர் சொன்னவை இரண்டு விஷயங்கள். ஒன்று, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ள முற்படும் பெண்கள் பாதுகாப்பான முறையை கை கொள்ள வேண்டும். மற்றொன்று, எந்த படித்த ஆணும் தனக்கு வரப்போகும் மனைவி "கற்புள்ளவளாக" (அதாவது, திருமணத்திற்கு முன் மற்றொரு ஆடவனுடன் பாலியல் உறவு கொள்ளாதவளாக) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். இவற்றை சில ஊடகங்களும், கலாச்சாரக் காவலர்களும் போட்டுக் (திரித்துக்) கலக்கியதில் தமிழகத்தில் குட்டை குழம்பி, சிலருக்கு மூளையும் குழம்பி விட்டது! இக்கருத்துக்களை எதிர்ப்பவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் ? திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பதன் அவசியத்தையும் (உன்னதத்தையும்), ஓர் ஆண் 'கற்புள்ள' பெண்ணை மனையாளாகப் பெறுவதால் கிடைக்கும் பெரும் சிறப்பையும் மேடை போட்டு விளக்கியிருக்க வேண்டும் (அல்லது அவை குறித்து துண்டு பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்திருக்க வேண்டும்!) அல்லவா !?! மேற்கூறிய இரண்டையும், தமிழ் கலாச்சாரப்படி, ஆடவர்களுக்கு பொருத்திப் பார்க்கவே கூடாது !!! அவர்கள் சுதந்திரப் பறவைகள் !!!

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது நம் தமிழ் கலாச்சாரமாகவே இருக்கட்டும்! நானும் இக்கருத்தை ஆதரிப்பவன் தான்! அதற்காக, சகிப்புத் தன்மை துளியும் இன்றி, செருப்பு, விளக்குமாறு, அழுகிய தக்காளி, முட்டை, கழுதையின் துணை கொண்டு, ஆர்ப்பாட்டமாக கண்டனம் தெரிவித்து, தனிமனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இத்தகைய அராஜகப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. முன்பொரு முறை, தேர்தலில் தோற்ற கலைஞர் அவர்கள், தமிழனை "சோற்றாலடித்த ஏதோ" ஒன்றாக
வர்ணித்திருந்தார். அப்போது, எங்கே போயிருந்தனர், இப்போது பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிக்கும், மான உணர்ச்சி மிக்க, இவர்களெல்லாம் ?

"திருமணத்திற்கு முன் உறவு" என்பது ஒருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் .... அதனால், ஒரு பெண் சமூகத்தில் சந்திக்க நேரிடும் சங்கடங்களுக்காகவும், அப்பெண்ணின் வாழ்க்கை திசை மாறிச் செல்லக்கூடிய ஆபத்திற்காகவும்! அத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பது, நன்னடத்தை கொண்டவராக பிள்ளைகளை (ஆண், பெண் ஆகிய இருபாலரையும்!) வளர்ப்பதும், குடும்பச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மூலமாக பெருமளவு பெற்றோரின் கைகளிலும், ஓரளவு கல்வி அமைப்பிலும், ஆசிரியர் கைகளிலும் உள்ளது என்பது நிதர்சனம்.

இதைக் கூட புரிந்து கொள்ளாமல், யாரோ தூண்டி விட, இந்த "கலாச்சார மெய்க்காவலர்கள்" 'தையத்தக்கா' என்று குதிப்பதும், மாவட்டம் மாவட்டமாக வழக்கு போடுவதும் போன்ற கேலிக்கூத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில், சுகாசினி குஷ்புவுக்கு ஆதரவாக நிலை எடுத்ததோடு நில்லாமல், "ஒட்டு மொத்தத் தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக" ஸ்டண்ட் அடித்திருக்க வேண்டாம். என் சார்பில் மன்னிப்பு கேட்க அவர் யார் என்பதற்காக இதைக் கூறவில்லை. குஷ்புவை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அவர் கருத்தை வெளியிட அவருக்கு முழு உரிமை உண்டு என்று நம்புபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் !!! ஆனால், அவர்களில் பலர் 'நமக்கேன் வம்பு' என்று மௌனிகளாக இருக்கிறார்கள்.

இந்த வார ஆ.விகடனில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி சிந்திக்கத் தக்க வகையில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதே போல், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம், 'மகளிர் உலகம்' என்ற அமைப்பைச் சேர்ந்த அம்மு ஜோசப், வசந்த் கண்ணபிரான், ரித்து மேனன் மற்றும் தேசிய மகளிர் கமிஷன் தலைவர் திருமதி கிரிஜா வியாஸ் ஆகியோர் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே, அவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று, நிதியமைச்சர் ப.சிதம்பரமும், RSS-உம் (?) குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள்.

சுகாசினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருபவர்களில் ஒருவரான பேராசிரியர் தமிழண்ணல் கூறியிருப்பதைப் பாருங்கள்! "தமிழர்கள் மான உணர்ச்சியும், நாண உணர்ச்சியும் மிக்கவர்கள். இவற்றை இழந்தவர்கள் தான் உளறுவார்கள்" என்கிறார்! கண்டனம் தெரிவிக்கின்ற போர்வையில் ஒரு பெண்ணை இவ்வாறு இழிந்து பேசுவது மட்டும் சரியா ??? பேராசிரியர் பழனியப்பன், தமிழ் மக்களுக்கு கலவியை விட உடல் பெரிது, உயிர் பெரிது, மானம் பெரிது, தமிழும் மானமும் வேறு வேறு அல்ல என்று ஏதேதோ வசனம் பேசி விட்டு, சுகாசினி இவை குறித்து அறியாததற்குக் காரணம் அவர் "வந்த வழி அப்படி" என்கிறார்! பெரியார்தாசன் ஒரு படி மேலே போய், "மனிதர்களின் பிரதிநிதியாக ஆவதற்கு மாடுகளுக்கு தகுதியில்லை" என்று தனி நபர் தாக்குதலில் இறங்குகிறார். கல்வியாளர்களே இப்படி இருந்தால், பாமரனிடம் எப்படி சகிப்புத் தன்மையை எதிர்பார்க்க இயலும் ?!?!

லேட்டஸ்டாக, திருமா விஜயகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்! அதில், நடிகர் சங்க உறுப்பினரான குஷ்பு, சுகாசினி ஆகியோர் பொதுமக்களுக்கு 'எதிராக' கருத்து கூறியதாகவும், பொதுமக்களுக்கு 'விரோதமாக' செயல்படுவதாகவும், அவர்களை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு சங்க சட்டப்படி, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது! என்னத்த சொல்ல ?!!?

குஷ்புவின் கருத்துக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து, அவற்றை மிகத் தீவிரமாக எதிர்த்த கலாச்சாரக் காவலர்களின் செயல்களினால், அரசியல் களத்தில் குஷ்பு ஒரு Worthy Adversary என்ற பிம்பம் மக்களிடையே உருவாகி வருவதன் விளைவாக, பிற்காலத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு வடநாட்டுப் பெண்மணி முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது :)

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, துளியும் சகிப்புத்தன்மை அற்ற, இப்போக்கை கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தின் பால் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் (ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ...)இப்போது வாயைத் திறக்க விட்டால், கலாச்சாரக் கோவலர்களின் அனுமதியின்றி, பிறகு எப்போதும் வாயைத் திறக்க இயலாத ஓர் அவலமான சூழல் எதிர்காலத்தில் உருவாகி விடும் அபாயம் உள்ளது. தனிமனித கருத்துச் சுதந்திரத்தை கேள்விக் குறியாக்கும் இத்தகைய போக்கு குறித்து, தற்போது நீதிமன்றங்களில் இவ்விவகாரம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பல வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்பு வாயிலாக, நீதியரசர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர்

நினைவூட்டல்: இப்பதிவைப் படிக்கும் வாசக நண்பர்கள் மறக்காமல், (பின்னூட்டுவதற்கு விருப்பமின்மையோ, நேரமின்மையோ காரணமாக இருந்தாலும்!) தயவு செய்து, தங்கள் ஆதரவையோ எதிர்ப்பையோ +/- வாக்கு வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் !!!

23 மறுமொழிகள்:

முகமூடி said...

இந்த அடக்குமுறைக்கு எதிராக அவரவருக்கு இயன்ற வகையில் கண்டனம் தெரிவிப்பது அனைவரின் கடமையாகும். இல்லையெனில் ஞாநி சொன்னது போல் எப்போதுமே சொல்ல முடியாமல் போகும்..

இது குறித்த என் கண்டனம் இங்கே

வினையூக்கி said...

பயமாயிருக்கிறது பின்னூட்டமிடக்கூட, எங்கே அடி விழுமோ என்று.... கவலைபடாதீர்கள் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடுபவர்கள் ஆடட்டும்.... தேர்தலில் தெரியும் தமிழ் மக்களின் பொறுமை...

அப்புறம் நீங்கள் டென்டுல்கர் ரசிகர் போல.... உங்களிடம் வசமாய் மாட்டிக்கொண்டேன்.... என் பதிவைப் பாருங்கள்.

வானம்பாடி said...

//லேட்டஸ்டாக, திருமா விஜயகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்! //

இதை விட டாப் க்ளாஸ் கேணத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

said...

Today's Tamil Murasu says that Sania declined to comment on the issue. When I saw the news (Headlines Today) in the morning, what she said was totally different. She was asked the same question, which she said it was already answered. The reporter asked her to repeat the answer, for which she walked away - rightly so.

Till the media and the media persons are trying to make NEWS out of this issue, this sort of stories are never going to end.

-L-L-D-a-s-u said...

குஷ்பு கருத்து கண்டனத்துக்குறியது .. ஆனால் இவர்கள் அடிக்கிற கூத்து இருக்கே !!! குஷ்புவை ஒரு 'சக்தி'யாக மாறும்வரை விடமாட்டார்கள் ..

டாக்டர் ஷாலினின்னு ஒருத்தர் சொல்றதை விடவா குஷ்பு பெரிசா சொல்லீட்டாங்க ... ரஜினின்னு ஒரு வக்கீல் முதல்ல ஆதரவு தெரிவிச்சாங்க ..அதற்கு எதிர்ப்பு இல்லை .. ஆனால் சுகாசினி ஆதரவு தெரிவிச்சா எதிர்ப்பு .. சினிமாக்கார(ரி)களைத்தவிர மத்தவங்களையெல்லாம் இந்த ஆட்கள் மனுஷனா மதிக்கிறதில்லை போலிருக்கு ;) ....

வேலியில போற ஓனானை மடியில கட்டிக்கிட்டு குத்துதே குடையிதேன்னு சொல்லப்போறாஙக் ..

இவிங்கே போற போக்கப்பாத்தா குஷ்புதான் அடுத்த முதல்வர் போலிருக்கு .. அந்த கவலைதான் எனக்கு ..

முத்துகுமரன் said...

அய்யோ பாவம்.....

எல்லோருக்கும் தனி மனித சுதந்திரத்தின் அவசியம் இப்போதுதான் புரிகிறது போலும்...
ஆனால் படித்த அறிவாளிகள்(?) எல்லோரும் இந்தியாடுடேவில் சொன்ன கருத்துக்காக எதிரிக்கப்டுகிறார் என்று மீண்டும் மீண்டும் திரிப்பது எவ்வளவு கடைந்தெடுத்த அயோக்கியதனம். பாலியியல் சம்பந்தமாக இந்தியாடுடேவிடம் சொன்னது குஷ்புவின் சொந்த கருத்து. தமிழர்களின் ஒழுக்கத்தை பற்றி பத்திரம் கொடுக்க இவர் யார்.மேலும் தமிழகம் என்பது சென்ன்னைக்குள் மட்டும் சுருங்கிவிட்ட ஒன்றல்ல.
தமிழ் சமூகத்தின் மீதான அவர் செய்த கருத்தியல் வன்முறை மட்டும் ஜனநாயகரமானதா?

அறிவு(?) புத்திசாலிகள் வேண்டுமானால்
இந்த அம்பாள்களின் பின்னால் காவடி தூக்கிக்கொண்டு போவார்கள். சொரணை உள்ள தமிழன் எவனும் போக மாட்டான்.

வானம்பாடி said...

//இந்த அம்பாள்களின் பின்னால் காவடி தூக்கிக்கொண்டு போவார்கள். சொரணை உள்ள தமிழன் எவனும் போக மாட்டான்.//

ஆமாம், சொரணை உள்ள தமிழன் செருப்பும் துடைப்பமும்தான் தூக்குவான்.
புல்லரிக்கிறது.

வாசகன் said...

குஷ்பு என்ன சொன்னார்..

"அந்த இதழில் வந்திருந்த அந்தச் செய்தியின் அடிப்படையில் ஒரு நாளிதழ் குஷ்புவிடம் ""இப்படி சொல்லியிருக்கிறீர்களே?'' என்று கேட்டது. அதற்கு குஷ்பு ""என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா?'' என்று கூற அதன் பிறகுதான் பிரச்சினையே பூதாகரமானது."
- DINAMANI 27/09/2005


தமிழர்களைப் பற்றி 'யாரும் யோக்கியமில்லை' என்கிற தொனியில் குஷ்பு சொன்னதும் தவறு. அதற்காக குஷ்புவை நாட்டைவிட்டே துரத்தவேண்டும் என்பதும் தவறு. ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்த முடியாது.

தடி எடுத்தால் தண்டல்காரனாகி விடலாம் என்கிற மனப்பான்மையை நம் மக்கள் கை விட வேண்டும் என்பதும் 'கருத்து சுதந்திரம்' என்று யாரும் யாரையும் எப்படியும் பேசிவிடக்கூடாது என்பதும் நாம் இவற்றிலிருந்து உணரவேண்டிய பாடங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

voted +ve.. nothing to comment as I agree mostly.

ஜெ. ராம்கி said...

Good follow up. I forgot to inform you about NDTV discussion sir. Hope you might have seen that programme. I could see there a hot dicussions among people like Thirumavalavan, Cho Ramasamay, Sarthakumar, Hindu Ram, Kanimozhi, Charuhaasan & Kumarai Anandhan's daughter. Here i can recommend some awards... :-)

Mr. Entertainer - Cho

Mr. U turn - Thirumavalavan

Mr. Compromiser - Hindu Ram

Mr. Fluency - Sarathkumar

Mrs. Clear - Kanimozhi

Mrs. loud noice - Kumari Ananthan's daughter

Mr. Law point - Charuhaasan

Mr. Pothujanam - A college student who asked Sarthakumar why Kushboo & Suhashini couldn't allow to comment whereas Vijayakanth & Sarathkumar could make political comments without any problem

enRenRum-anbudan.BALA said...

முகமூடி, வினையூக்கி, sudharsan, lldasu, முத்துகுமரன், raaja, penathal suresh, RAMKI and anonymous friend,

கருத்துக்களுக்கு நன்றி !

முத்துகுமரன்
//எல்லோரும் இந்தியாடுடேவில் சொன்ன கருத்துக்காக எதிரிக்கப்டுகிறார் என்று மீண்டும் மீண்டும் திரிப்பது எவ்வளவு கடைந்தெடுத்த அயோக்கியதனம்.
//
குஷ்பு முதலில் சொன்ன 2 கருத்துக்களுக்கே எதிர்ப்பு வந்தது என்பதும் உண்மை. அது குறித்து அவரிடம் கேட்டபோது, 'யாரும்
யோக்கியமில்லை' என்கிற தொனியில் குஷ்பு சொன்னது அமைந்ததும் உண்மை. எனவே, 'கடைந்தெடுத்த அயோக்கியதனம்' என்பது சற்று TOO MUCH !!! நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

I dont understand one point. Always there will be split of opinion. I have no idea why ppl use such harsh words on whom so ever supports kushboo. There should be a decency in opposing any idea. Even if it is wrong to support kushboo, there is way to express the disagreement. The way these ppl shout and use harsh words simply proves their deliberation to shut their mouth.

ilavanji said...

//மேற்கூறிய இரண்டையும், தமிழ் கலாச்சாரப்படி, ஆடவர்களுக்கு பொருத்திப் பார்க்கவே கூடாது !!! அவர்கள் சுதந்திரப் பறவைகள் !!!
//

ஹிஹி..

அப்படியே யாராவது கேட்டாதான் அது தமிழக ஆண்களை கேவலப்படுத்துவதாகவா ஆகிவிடப்போகிறது?! "அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல! நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல!" ன்னு அறிஞர் மாதிரி சொல்லிக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்! நாமளும் ஓட்டுப்போட்டு அவிங்களை முதலமைச்சர் ஆக்கிவிடவேண்டியதுதான்!!

ilavanji said...

//நாமளும் ஓட்டுப்போட்டு அவிங்களை முதலமைச்சர் ஆக்கிவிடவேண்டியதுதான்//

நான் இதனைமட்டும் வைத்து அண்ணாவின் முதலமைச்சர் தகுதியை எடைபோடவில்லை! ஆண்களுக்கான -- சுதந்திரப் பறவைகள் -- க்கு இரு எடுத்துக்காட்டு. அவ்வளாவுதான்!!

சந்திப்பு said...

குஷ்பு விவகாரம்
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி கருத்து!

நடிகை குஷ்பு அவர்கள் ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருந்த கருத்துகள் சம்பந்தமாக, தமிழகத்தில் ஒரு சாரார் கண்டன ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு, கிரிமினல் வழக்குகள் தொடுப்பது ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை சுகாசினி மீதும் இது போன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
குஷ்பு தெரிவித்துள்ள கருத்துக்கள் மார்க்சி°ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல. ஆனால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கிற முறை ஜனநாயக ரீதியிலும்; ஆரோக்கியமான முறையிலும் இருக்க வேண்டுமென மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாநில செயற்குழு கருதுகிறது.
மக்களுடைய எத்தனையோ வாழ்வியல் பிரச்சினைகள் குவிந்துக் கிடக்கிறபோது, இப்பிரச்சினையில் தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்ச்சிப் போக்குகள் விரும்பத்தக்கதல்ல; மேலும், வன்முறையை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டுமென மார்க்சி°ட் கட்சி வலியுறுத்துகிறது.
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அவர்களுக்கு
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி பதில்!
நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை. இது ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டுமென்பதே மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் கருத்து. இதற்கு பதில் அளிக்கிற வகையில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அவர்கள் கருப்பு கொடி காட்டுவதும், கோஷங்கள் எழுப்புவதும் தவறா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஒரு பிரச்சினையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதும், கருப்பு கொடி காட்டுவதும் ஜனநாயக ரீதியான நடைமுறை என்பதை யாரும் மறுக்க முடியாது; மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியும் இதை மறுக்கவில்லை. நடிகை குஷ்புவுக்கு எதிராக நடந்த இயக்கம் எப்படி நடந்தது என்பது பற்றி தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் செய்தியாக வெளியானது. இதை அனைவரும் பார்த்தோம்; ஆட்சேபனை தெரிவிப்பது என்ற பெயரால் செருப்பை வீசுவது, துடைப்பத்தை காட்டுவது, முட்டையை வீசுவது போன்ற செயல்கள் சரியானது என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கருதுகிறாரா?
மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யருக்கு எதிராக தமிழக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கண்டித்தார்களா எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்? சட்டமன்றத்திற்கு உள்ளேயும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் ஜனநாயக விரோதமாக நடந்துக் கொள்ளக்கூடிய அதிமுக அரசை எதிர்த்து மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி தொடர்ச்சியாக இயக்கம் நடத்தி வருகிறது. அதிமுகவின் அணுகுமுறையை சுட்டிக்காட்டி குஷ்புக்கு எதிராக நடைபெற்ற விரும்பத்தகாத நடைமுறையை பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி நியாயப்படுத்துகிறரா?

ஜோ/Joe said...

கம்யூனிஸ்டுகளின் இந்த வெளிப்படையான கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை

kirukan said...

PMK and VC will be taught a lesson in the coming election. Thats sure.

ஜோ/Joe said...

கிருக்கன்,
உங்கள மாதிரி PMK-வ எதிர்க்குற முக்கா வாசி பேரு பேசுறதோட சரி..எலக்சன் அன்னிக்கு பூத் பக்கம் தலை வச்சு படுக்குறதில்ல .அப்புறம் அவங்க ஜெயிச்ச பிறகு ,அடுத்த தேர்தல்ல கவுத்துடுவோம்ன்னு இணையதுல மட்டும் ஓட்டு போட்டுடுறது..நல்ல தமாசு போங்க!

உலகன் said...

நியூசன்ஸ் வழக்கு கைதிக்கு தூக்கு தண்டனை கேட்கும் புத்திசாலிகள் தான் இவர்கள். தங்கர்பச்சான் விவகாரத்திற்குப் பழிவாங்க இவர்கள் ஊதிவிட்ட இந்த விவகாரம், இப்போது எங்கெங்கோ திசைமாறி இங்கு வந்து நிற்கிறது. இது குறித்த எனது ஆரம்ப வலைப்பதிவைப் படியுங்கள் http://www.ennathannadakkum.blogspot.com. சுப்பிரமணிய சுவாமிக்கு பாவாடையைத் தூக்கி சிலர் ஆபாசமான வகையில் எதிர்ப்பு தெரிவித்தார்களே அப்போது இந்த கலாச்சார காவலர்கள் எங்கு போயிரு ந்தார்கள் அல்லது அது தான் தமிழ்க் கலாச்சாரம் என்று வாதிடப் போகிறார்களா ? உண்மையில் ஒவ்வொரு தமிழன் ரத்தத்தோடு இணைநத விஷயமான கடாவெட்டி பொங்கல் வைத்து வழிபடும் கலாச்சாரத்திற்கு அரசாங்கம் தடைபோட்டபோது தன்னிச்சையாக எழாத போராட்டம், நகர்ப்புற அதிலும் உயர்தட்டு மக்களால் மட்டுமே அதிகம் வாசிக்கப்படக் கூடிய ஒரு பத்திரிகையில் வந்த சர்வேயைப் பார்த்து மக்கள் தானாகக் கொதித்தெழுந்தார்களாம். நல்லாக் கிளப்புறாங்கைய்யா பீதியை.

b said...

அன்புநிறை பாலா,

பத்திரிக்கை கருத்து கேட்கும்போது எத்தனைபேர் கற்போடு இருக்கிறார்கள், இழந்தவர்கள் எத்தனைபேர், இழக்கப் ப்போகிறவர் எத்தனை பேர் போன்ற கருத்துக்களை குஸ்பு சொல்லி இருக்க வேண்டாம். அதிலும் படித்தவர்கள் நிச்சயம் கற்புள்ள பெண்தான் வேண்டுமென்று கேட்க மாட்டான் என்று சொன்னது அபத்தத்தின் உச்சம். அடுத்து அணைந்திருந்த பிரச்னையை ஊதிப் பெரிதாக்கியது சுகாசினி.

அரசியல்வாதிகள் தங்கள் எதிர்காலத்தினை முன்னிட்டு ஆதாயம் தேட முயல்வார்கள். ஆனால் இங்கு படித்தவர்கள், பேராசிரியர்கள் கூட எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு இந்த ப்ரச்னையால் ஆதாயம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ப்ரச்னைக்குரிய ஒரு கருத்தினைக் கூறும்போது நன்கு சிந்தித்து கூற வேண்டும். வள்ளுவர் திருக்குறளில் நவடக்கம், சொல்வன்மை பற்றி அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.

said...

//அந்த இதழில் வந்திருந்த அந்தச் செய்தியின் அடிப்படையில் ஒரு நாளிதழ் குஷ்புவிடம் ""இப்படி சொல்லியிருக்கிறீர்களே?'' என்று கேட்டது. அதற்கு குஷ்பு ""என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா?'' என்று கூற அதன் பிறகுதான் பிரச்சினையே பூதாகரமானது." //

இந்த வாக்கியம் தான் மிகவும் கண்டிக்கப்படவேண்டியது...இதுவே தமிழ் பெண்கள் என்று பொருள் வராமல் குறிப்பிட்ட இனத்தை (அல்லது ஜாதி என்று வைத்துக்கொள்வோம்.) புரட்சிப்பெண் குஷ்பு பேசியிருந்தால் இத்தனை கருத்துச்சுதந்திர
காவலாளிகள் வரிந்துக்கட்டிக்கொண்டு வந்திருப்பார்களா? சந்தேகம் தான்.

தமிழ் பெண் என்று பொதுவாக சொன்னால் பல பேருக்கு அது நாமோ அல்லது நம்ப
குடும்ப பெண்களோ இல்லை என்ற எண்ணம் வருகிறதோ?

enRenRum-anbudan.BALA said...

இளவஞ்சி, santhipu, ஜோ, kirukan, உலகன், மூர்த்தி, tamilkusumban,
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி !

அன்பில் மூர்த்தி,
//ஆனால் இங்கு படித்தவர்கள், பேராசிரியர்கள் கூட எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு இந்த ப்ரச்னையால் ஆதாயம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
//
ஒப்புக் கொள்கிறேன். ஆனால், கல்வியாளர்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடல்களாக இருத்தல் அவசியம் அல்லவா ? அவர்கள் நாவடக்கமின்றி எதிர்ப்பை தெரிவித்ததைத் தான் தவறு என்கிறேன்.

Tamilkusumban,
//இந்த வாக்கியம் தான் மிகவும் கண்டிக்கப்படவேண்டியது...இதுவே தமிழ் பெண்கள் என்று பொருள் வராமல் குறிப்பிட்ட இனத்தை (அல்லது ஜாதி என்று வைத்துக் கொள்வோம்.) புரட்சிப்பெண் குஷ்பு பேசியிருந்தால் இத்தனை கருத்துச்சுதந்திர காவலாளிகள் வரிந்துக்கட்டிக்கொண்டு வந்திருப்பார்களா? சந்தேகம் தான்.
//
இதில் என்னங்க சந்தேகம் ? குஷ்பு அப்படிப் பேசியிருந்தால், அந்த இனத்தை (அல்லது குறிப்பிட்ட சாதியை) வெறுப்பவர்கள் குஷ்புவுக்கு வரிந்து கட்டியிருப்பார்கள். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரமாக எதிர்த்திருப்பார்கள்!!! சண்டை மண்டை உடைந்திருக்கும் :)

பெண்கள் (அதுவும் திரைப்படத் துறையினர்!) சம்மந்தப்பட்டதால் மட்டுமே, இப்பிரச்சினை அவ்வளவாக சாதிப்பூச்சு பெறாமல் தப்பியது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

தமிழ்கலாச்சார பாதுகாவலர்களுக்கும்,பெண்மான காவலர்களுக்கும்,இரு பெண்களை எதிர்த்து செருப்பு,துடைப்பக்கட்டை போன்ற ஆயுதங்களை ஏந்தி வீரப்போர் புரியும் மாவீரர் படைகளுக்கும் என் கண்டனம்.

பெண்களுக்கு எதிராக போர்புரியும் உன்னை கண்டால் புறநானூற்று தமிழன் வெட்கத்தால் தற்கொலை செய்துகொள்வான்.நீயா தமிழன்?இல்லை நீ தலிபான்.

தமிழனை மணந்து தமிழ் குழந்தைகளை பெற்ற ஒரு தாயை தமிழச்சி அல்ல என்று சொல்லும் தமிழக தலிபான்களை கண்டிக்கிறேன்.

பரமக்குடியில் பிறந்த தமிழச்சியை கைபர் கணவாய்க்கு ஓடசொல்லும் தமிழக ஒசாமா பின் லாடன்களை,தமிழக வட்டாள் நாகராஜ்களை வன்மையாக கண்டிக்கிறேன்

குஷ்பு தமிழ் நாட்டின் மருமகள்.சுகாசினி தமிழ்மகள்.2 பெண்களுக்கு எதிராக உலகப்போர் தொடுத்திருக்கும் மாவீரர் கூட்டமே.நீ ஒடு தமிழ்நாட்டை விட்டு.

ஆப்கனிஸ்தானுக்கு ஓட வேண்டியவன் நீ தான்.தலிபான் ராஜியத்தின் முழுமுதல் பிரஜையாகும் தகுதி உனக்குதான் இருக்கிறது.

பெண்தொடைகளின் நடுவே கலாச்சாரம் உள்ளது என நம்பும் தலிபானே ஓடிப்போ தமிழ்நாட்டை விட்டு.ஓடிப்போ தலிபான் நாட்டுக்கு

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails